அன்பு

Be kind whenever possible. It is always possible...

-dalai lama-

அன்பு எல்லையில்லாதது ஆதரவு தொல்லையில்லாதது அன்பைக் கொடுக்க கஞ்சத்தனமேன் ஆதரவு தண்டப்பணமேன்.

உள்ளத்தில் கொட்டிக்கிடக்கிறது உலகத்தில் தேடப்படுகிறது உவமானம் உவமேயம் எதற்கு உள்ளதை ஊட்டி வளர்க்க.

அல்லல் தொல்லையன்று அங்கலாய்த்துக் கொள்வதேனோ அரவணைப்பிற்கு ஆளில்லையாம் அவர்களுக்கு பெயர் அனாதையாம்.

ஆறுதல்கள் எங்கே என்று தேடி அங்குமிங்கும் அலைக்கலிகின்றனர் அகத்தில் தான் அன்புண்டு அது புன்னகையாய் முகத்தில் உண்டு.

அள்ளி இறைக்காவிட்டாலும் சரி அன்பை கிள்ளி எரியாதிகள் உறவை.

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka

கருத்துகள்