அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 04

கியோனிடம் என்னை கவனி என்றவன் தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை வேண்டுமென்றே இடித்து விட்டு அவளிடம் மன்னிப்பு கேட்கும் தோரணையில் தோளை நோட்டமிட்டான். எதுவும் தெரியவில்லை. அவளை விட்டு விலகி கியோன் கிட்ட வந்தான்.

"என்னடா பண்ணிட்டு வர்ரே..?"

"வாடா.. அந்த பொண்ணு இல்ல"

என்றவன் தன்னுடைய திட்டத்தை கியோனுக்கும் சொல்ல இருவரும் சேர்ந்தே பெண்களை இடித்து மச்சத்தை நோட்டமிட்டனர். இடையில் இரண்டு பெண்களிடம் கியோன் அடியும் வாங்கி விட்டான். ஆனால் ரியூகியை இன்னொருவாட்டி அவர்களே வந்து இடிக்கும் அளவுக்கு அவன் பேரழகன். ஆனாய் இவர்கள் பரீட்சித்து பார்த்த எந்த பெண்ணின் தோளிலும் டிராகன் மச்சம் இருக்கவில்லை.

******************

அலைஸ் காலேஜ் முடிந்ததும் ஷாப்பிங் மால் பக்கமாக வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென யாரோ இரு ரவுடிகள் அவளை துரத்த ஆரம்பித்தனர். அவள் பயந்து சந்து பொந்தெல்லாம் ஓடி சந்தைக்கு செல்லும் குறுக்கு வீதி வழியாக தப்பித்து ஓடி வர அவர்களும் விடாது துரத்தி கொண்டே இருந்தனர். கடைசியாக அவள் வந்து மோதியது ரியூகி மேலேதான். அவளோ வீதியில் விழுந்து விட துரத்தி வந்தவர்கள் ரியூகியின் கட்டுமஸ்தான உடலை கண்டு ஓடிவிட்டார்கள்.

ஏன் துரத்தி வந்தாங்க எதுக்கு ஓடுறாங்க. ஒன்னும் புரியாமல் கீழே விழுந்தவளை தூக்குவதற்காக கையை நீட்டினான்.

"மறந்தே போய்ட்டேன். கைய கொடுங்க." என்றதும் தான் இருவரும் ஆளுக்காள் பார்த்து கொண்டனர். அலைசுக்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன பார்க்குறீங்க... கைய கொடுங்க" என்று மறுபடியும் சொன்னவனின் கண்கள் அவளது தோளில் இருந்த டிராகன் மச்சத்தை கண்டு கொள்ள அவனும் அப்படியே அதிர்ந்து போய் நின்றான். உடனே பயத்தில் அவன் கையை தட்டிவிட்டு அலைஸ் வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

"என்னடா அந்த பெண்ணை பார்த்து இப்படி திணர்றே."

"கியோன்… நம்ம பிரின்சசை கண்டுபிடிச்சிட்டேன் டா."

"என்ன..?"

"அப்போ போனாளே.. அவதான் அலீஸியா… "

"என்ன உண்மையாவா?"

"ஆமாடா.. அவ தோளில் அந்த மச்சத்தை பார்த்தேன்.. வா அவங்கள பின் தொடருவோம்" என்று கியோனையும் அழைத்து கொண்டு சென்றான்.

அலைஸ் வீட்டுக்கு சென்றதும் கொஞ்ச நேரம் கட்டிலில் பயத்துடன் கிடந்தாள். அவளுக்கு ரியூகி நியாபகமாவே இருந்தது. தான் கனவில் கண்டது போலவே. "தன்னை கொல்ல வந்திருப்பானா… யாரது…" என்றெல்லாம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவள். கொஞ்ச நேரத்தில் எழுந்து குளியல் ஒன்றை போட்டுவிட்டு மறுபடியும் கட்டிலில் வந்து விழுந்தாள். அப்போது அவளுடைய நண்பிகள் மாலில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

"என்னம்மா டல்லா இருக்கே…சாப்பாடு சரியில்லையா… வயிறு வலியா… ஷாப்குக்கு கூட வரல…." என கேட்டாள் எமிலி..

"சும்மா அவளை தொல்லை பண்ணாதே.." என்றாள் ஹாருஹி.

"என்னடி உன்னோட ப்ரோப்ளெம்.. ஏன் காலைல இருந்து ஒரு மாதிரி இருக்கே."

"நேற்று ஒரு கனவு கண்டேன்… அதுல ரெண்டு பேர் என்னை துரத்த ஒருத்தன் கத்தியால் குத்த வந்தான்." என்றாள்.

"ப் பூ.. அது வெறும் கனவு தானே.. அதுக்கு போய் .மூஞ்ச உம்மென்னு…."

"அது வெறும் கனவு என்னா விட்டிருக்கலாம்.. இன்னிக்கி அப்படியே நடந்துச்சு டி…."

"அடக்கடவுளே!"

"நான் கனவுல பார்த்த அதே ஆளு அதே முகம்…. நான் அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன்…"

"ஆமா அவன் பார்க்க அழகா இருந்தானா?" என்று மீஸா கேட்க எல்லோரும் அவளை முறைத்தனர்.

"மீஸா…."

"சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன். ஆ ஊன்னா வந்துடுவீங்களே!"

"நீ கவலைப்படாதே… அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது… அது ஜஸ்ட் பொம்புள பொறுக்கி யா இருப்பானுங்க... மனச போட்டு குழப்பிக்காம இரு…" என்றாள் ஹாருஹி.

"தாங்ஸ் டி.."

ஏதோ எல்லாம் ஒரு எதேச்சையாக நடந்தது என்றெண்ணி அந்த விடயத்தையே மறக்க முயற்சித்தாள் அலைஸ்.

தொடரும்…….
ALF. Sanfara.

கருத்துகள்