அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 07

[products]

அரண்மனை வாசலில் இருந்த காவலாளிகள் கியோனையும் ரியூகியையும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் எவ்வளவு சொல்லியும் ஈட்டி முனையில் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது மாஸ்டர் ஷா அங்கு வந்தார்.

"அவங்கள விட்டுடுங்க,"

இருவரும் மாஸ்டர் ஷாவை தலைகுனிந்து வணங்கவே அலைசும் அப்படியே செய்தாள்.

"இளவரசி உங்க வருகையால் நாங்க சந்தோசப்பர்றோம் ஆனா ரியூகி... நீ இவங்கள கூட்டிட்டு வர ஏன் இவ்வளவு தாமதம் ஆச்சு." என்று முறைத்தார்.

"அது…."

"நீ உன்னோட கடைசி பயிற்சியில மறுபடியும் தோத்திட்டே.

"அட கடவுளே!.." என்று ரியூகி சலித்து கொண்டான்.

"அதிக நேரம் வெளியில் நிக்குறதும் ஒருவகையில் ஆபத்து தான் அதனால் வாங்க அப்படியே என்னோட வீட்டுக்கு முதலில் போய் வந்து பேசுவோம்." என்று அழைத்து கொண்டு சென்றார் ஷா.

"முதலில் எல்லோரும் குளிச்சிட்டு ஆடைகளை மாற்றிட்டு வாங்க " என்றதும் அலைஸ் முழித்தாள்.

"நான் நான் மாத்திக்க எதுவும் கொண்டு வரலியே!" மாஸ்டர் ஷா சிரித்து விட்டு .

"வீட்டுக்கு பின் புறமாக இருக்குற குளத்துக்கு போங்க. அங்க நீங்க போட்டுக்க வேண்டிய ஆடைகள் இருக்கு ரியூகி உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பான்." என்றார்.

"என்னது நானா?"

"இவனா" இருவர் பதிலில் அதிர்ச்சி தொனித்தது.

"நீங்க இவனை தாராளமாக நம்பலாம். ஏனெனில் இவன் என்னோட மாணவன்" என்றார். அதன் பின்னர் அவர்கள் இருவரும் வீட்டுக்கு பின்புறம் சென்றார்கள்.

"ஐயோ இங்க ஷவர் எல்லாம் கிடையாதா?"

"என்ன கேட்டீங்க மேடம்….."

"அது... அது… வந்து எனக்கு நீச்சல் தெரியாது ஒரு வேளை"

"உங்களை ஒன்னும் இந்த குளத்தில் நீந்த சொல்லல குளிக்க தான் சொன்னோம். சும்மா இறங்கி குளிப்பீங்களா அதை விட்டுட்டு." ரியூகி மீது லேசான கடுப்பான பார்வையை வீசிவிட்டு,

"சரி நான் குளிக்க போறேன்.."என்றாள். அவன் சாதாரணமாக நின்று கொண்டிருக்க… மறுபடியும் கொஞ்சம் சத்தமாக,

"நான் குளிக்கணும்"

என்று அழுத்தி கூற அப்போது தான் ரியூகி புரிந்து கொண்டான்.

"ஒஹ்ஹ்... நான் திரும்பி நிக்குறேன் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க" என்றான்.

"இதை கூட நாம சொல்லணும்"

என்று முணுமுணுத்து கொண்டே மெல்ல ஆடைகளை களைந்து குளத்தில் இறங்கினாள். மெல்ல மெல்ல ஆழம் அதிகரிக்க தலை மட்டுமே தெரிந்தது. அவளும் பயத்தில் ரியூகியை அழைத்து,

"ரியூகி எனக்கு பயமா இருக்கு…"

"சீக்கிரம். சீக்கிரம் ஒன்னும் ஆகாது... நாங்களும் குளிக்கணும்" என்றான்.

அலைஸ் குளிக்க ஆரம்பித்த போது அவளது காலை ஏதோ ஒன்று வருடிக்கொண்டே இருந்தது.

"ரியூகி!..இந்த குளத்தில் என் காலுக்கு கீழே ஏதோ இருக்கு.."

"அது சின்ன சின்ன மீன்களா இருக்கும்." என்றான்.

"இல்ல ரியூகி, இது ஒன்னும் மீன் போல இல்ல."

என்று சொல்லி முடிப்பதற்கிடையில் அந்த ஜந்து அவளை பிடித்து இழுக்க,

"ரியு…."

என்றதோடு சத்தம் ஒன்றும் வராமையால் பயத்துடன் ரியூகி

"என்ன சத்தத்தையே காணும்..." என்றபடி திரும்ப அவள் இழுக்கப்பட்ட இடத்தில் நீர்க்குமிழிகள் வெளியேறுவதை கண்டு பதறி, ஓடிப்போய் குளத்தில் பாய்ந்தான். சுழியோடி சென்று அலைஸை இழுத்து சென்ற மர்ம விலங்கை பின்தொடர்ந்தான். அதன் கால்களில் அலைஸ் மயங்கி கிடந்தாள். அது அலைஸை விட்டுவிட்டு ரியூகியை தாக்க வர அவன் தன்னுடைய வித்தைகளில் ஒன்றை பயன்படுத்தி ஒரு குத்து விட்டான். அது பெரிய அலறளுடன் தப்பித்து விட்டது…

நீரின் அடிப்பகுதியில் வீழ்ந்து கொண்டிருந்த அலைஸை ரியூகி எடுத்து வந்து கரையில் கிடத்தினான். அவனுடைய மேலாடையை கழற்றி அவளை போர்த்தி விட்டு,

"அலைஸ்.. அலைஸ்… கண்ணை திற!" என்று சொல்ல அவளிடம் எந்த மூச்சு பேச்சும் இல்லை.

"அலைஸ்… ஊஹூம்.. வேற வழி இல்ல… ஸாரி. பிரின்ஸஸ்…"

என்றவன் அவள் உதடுகளில் வாய் வைத்து அவள் குடித்திருந்த நீரை உறிஞ்சி துப்பினான். நாலு ஐந்து தடவை இப்படி செய்ததும் சிறியதொரு இருமலுடன் கண்ணைத்திறந்தாள்.

தொடரும்…….
ALF. Sanfara.

கருத்துகள்