மஞ்சனங்கள் வழிவிட ஆவலோடு தன் பொற்கதிரைப்பரப்பி மிளிரும் ஒளிக்கீற்றாய் ஒளியிழந்து இருக்கும் அகல்விளக்கில் ஒளிநிழலில்
குளிர்காயும் பிணியோடு, ஏகஃவனை ஏகமாய் ஏற்று ஏந்திய கைகளுடன் ஏக்கமுடன் ஏங்கித்தவிக்கும் உள்ளத்தில் மன்னவனே மன்னாளனே
ஈமானியச்சுவையை தனை மனங்கொண்டு உறுதியுடன் ஈமானுடன் கருப்பொருள் சேர இரட்சகனை வேண்டுகிறேன்.
மண்ணறையிலும் மணக்கும் மறவாது மயக்கம் தெளிந்து மனந்தெளியும் அந்நாளையிலே குதிரங்களில் குளித்துப்பெற்ற முத்தையும் அடுத்தடுத்த என் அயலுயிரை இழந்த இழப்பின் விளிம்பிலும் கண்ணெனக்காத்த அவர்தம் கண்கொண்டு கண்டு கொண்ட வசந்த காலப்பட்சிகளின் அரவனைத் தகரங்களைத் துப்பாக்கிரவை பதம் பார்த்ததை என்னவென்று சொல்வேனோ
தலையணையும் என் கண்ணீரை சுமக்கவில்லை பட்டுத்தலையணையை உன் வாக்குறுதியை கொண்டு என் காயங்களுக்கு மருந்திடுகிறேன். நீடித்த அந்நாளையிலே வசந்தத்தைக்காண எத்தனிக்கும் ஏக்கக் கண்களுடன்
பின்த் பஸ்லூன்
கருத்துகள்
கருத்துரையிடுக