புன்னகை இளவரசி கண்ணீரில் கரையும் பனி மழை ஞானத்தின் சிலை தைரியத்தின் மறு உருவம்
அன்பின் நீரூற்று அரவணைக்கும் தென்றல் காற்று இன்னிசை பாடும் குயில் கோபத்தின் சுட்டெரிக்கும் சூரியன்
இரவே அழகாக்கும் நிலவு சந்தோஷம் அவளுக்கு வானத்தில் தோன்றி மறையும் வானவில் மேண்மையில் ரோஜா
வீரத்தில் சிறுத்தை உற்சாகமூட்டுவதில் தாய்ப்பால் உதறி வீசுவதில் புயல் காற்று வலி தாங்குவதில் உழி
வடிவமைப்பதில் சிற்பி வர்ணம் தீட்டி அழகு பார்க்கும் ஓவியம் வஞ்சனை செய்வோருக்கு வாழ்விச்சு சோதனைகளின் கூண்டுப் பறவை
காமயிச்சர்களின் காட்சிப்பொருள் கனவான்களின் குலமகள் இளைஞர்களின் தைரியம் முதியோர்களின் மருந்து உறவுகளுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி
தன் உணர்வுகளை அளிக்கும் சுயநலவாதி தனக்காய் வாழ தெரியாத பொதுநலவாதி
அறிவூட்டுவதில் ஆசான் தட்டிக்கொடுப்பதில் தந்தை அரவணைப்பதில் தாய் உன்னதத்தின் மறு உருவம் உலகில் உருவம் எடுத்த தெய்வம் அவளே பெண்
கவிதை காதலன் அக்குறணை லஷாட்
கருத்துகள்
கருத்துரையிடுக