இன்​றைய ​காதல்

தொலைபேசி யோடு தொலைதூரம் ஆனது இன்​றைய ​காதல்

காதலியின் முகம் பார்க்க அன்று கால்கடுக்க காத்து கிடந்தோம் தெருவோரத்தில்

கதாலர்கள் நாம் இன்று முகம் பார்க்க எண்ணிய நோடிபொழுதில் தொலைபேசியை கைய்யிந்தி காணொலி காட்சியாய் தொலைபேசி  அழைப்புகள்

ஓர் காகிதத்தில் தன் காதலை வரைந்து தூது அனுப்பி விட்டு தூதுவன் வரும்வரை பதில் காகிததாலுக்காய் காத்திருந்த காதல்

இன்று எங்கே அத்தனையும் தொலைபேசியோடு மாறிவிட்டது குறுஞ்செய்தி பரிமாற்றமாய் இன்று எங்கு உள்ளது காதல்

அன்று காதலின் இம்சையில் காதலன் காதலி மடிசாய்ந்து வடித்த கண்ணீரும் புன்னகையும் இன்று தொலைபேசியோடு தொலைத்தூரத்தில்

நம் காதல் இரு உள்ளங்கள் ஒன்று செர்வதற்கு முன் இரு தொலைபேசிகள் ஒன்று சேர்ந்தது இன்றைய காதலில்

கவிதை காதலன் அக்குரணை லஷாட்

கருத்துகள்