உறவுக்காரன்

பசிச்சாலும் பத்து பைசா தர மனமில்லை ஆனா பஞ்சாயத்து பன்ன மட்டும் பறந்தோடி வருவாங்க

துவண்டவன தூக்கி விட வக்கனையில்ல ஆனா காரணத்த மட்டும் கச்சிதமா கேட்பாங்க

உதவிக்கு ஆள் தேடி ஊரெல்லாம் அலைந்தாலும் உறவுக்காரன் என்டு தள்ளித்தான் நிப்பாங்க

ஆறுதலா பேசுறதா சொல்லி வழவு மண்ணை எடுத்திட்டு ஊரெல்லாம் நம்ம கதைய பரப்பிடுவாங்க உறவுக்கார பயலுங்க

அழையாத வைபவம் நடந்திட்டா போதும் ஊரெல்லாம் நம்ம குலம் பேசுவாங்க

உபத்திரமும் உறவுக்காரனும் ஒன்டு உணர்ந்தா தான் நமக்கு நலவு

சாக்கடையும் தோற்றுவிடும் அவர்களின் மனதிற்கு முன்னால் பட்டதெல்லாம் சொல்லும் பைத்தியகாரி நானில்லை பத்திரமாய் பழகிடும் அனுபவக்காரி

சொந்தமும் சூனியமும் ஒன்டு இரண்டும் வினையாத்தான் போகும்

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான் மருதமுனை

கருத்துகள்