என்னில் கலந்தவள்

என் சுவாசக் காற்றில் கலந்த கண்ணீர் நீயே

கனவோடு கலந்த கவிதை நீயே

எனக்காய் பிறந்த உறவும் நீயே

உலகில் நான் வாழ காரணமும் நீயே

என் கண்ணில் தோன்றும் வின்பமும் நீயே

என் இதய சிம்மாசனத்தில் வாழும் ராணியும் நீயே

அன்பால் என்னை அடிமையாக்கியது நீயே

அரவணைப்பால் என்னை குழந்தையாயக்கியதும் நீயே

காதல் கதை பேசி என்னை அழைத்ததும் நீயே

கவிதை எழுத கற்றுத் தந்ததும் நீயே

இமை அசைவில் இசை பாடுவதும் நீயே

மௌனத்தால் கொள்ளும் ராட்சசியும் நீயே

இன்று என்னை தனிமையில் விட்டுச் சென்றதும் நீயே

இருந்தும் கலையாத மேகமாய் கரையாத காயங்களை சுமந்த வண்ணம் என் நினைவுகளிலும் நீயே

கவிதை காதலன் அக்குறணை லஷாட்

கருத்துகள்