என் தாகங்கள் தீரவில்லையே

தனிமையிலே என் இரவுகள் நகர்கின்ற போதும் உன் நினைவுகளை வாரிவாரி அளித்தும் அந்த இரவின் தாகங்கள் தீரவில்லையே

எத்தனையோ தலைப்புகள் கொண்டு என் கவி வரிகள் தொடங்குகின்றது உன்னை என்னியே

என் தாள்களும் கவித்துளிகளால் நனைகின்றது இருந்தும் அந்தத் தாள்களின் தாகங்கள் தீரவில்லையே

என் விதியோடு சண்டையிட்டு உன் முகம் காண ஓடிவந்தும் என் விழிகளில் தாகங்கள் தீரவில்லையே

உன் நினைவோடு வாழும் இந்த மனதிற்கு உனது பெயரை பருக்கிக் கொண்டிருக்கின்றேன் நிமிடக்கணக்கில் இருந்தும் என்னோடு உன் காதல் வந்து சேராததால் என் காதலின் தாகங்கள் கூட இன்னும் தீரவில்லையே என்னதான் செய்வது நான் !!

கவியிதழ் காதலன் ஐ.எம்.அஸ்கி அட்டாளைச்சேனை

கருத்துகள்