எழுந்து வருவீர்களா?

இந்த உலகத்தினை பார்த்து பயந்து வீழ்ந்து கிடக்கும் மானிடரே கொஞ்சம் உங்கள் மனதில் பயத்தை தகர்த்து எறிந்து வாருங்கள் இங்கு தகுதியில்லாத தலக்கன மானிடர்கள் அதிகமாய் கிடக்கின்றனர்!

இதற்காய் நீங்கள் உயிரினைப் பறிக்கப் போக வேண்டாம் உயிரான உறவுகளை உணவார பேசிப் போங்கள் எனக் கூறுகின்றேன்!

இவ்வுலகில் அச்சம் கொண்டு வாழ வேண்டும்தான் ஆனால் அச்சமே வாழ்வாய் இருந்திடக் கூடாது என்பதே என் கூற்று!

இங்கு நாம் ஒன்றும் குதுகலமாய் கிடக்கவரவில்லை புதர்களில் கிடக்கும் பிணங்களைப் பார்த்து சிரித்துக் கிடப்பதால்தான் இங்கு அரக்கன் வாழ்கின்றான்!

இங்கு இரக்க மானிடர் இல்லை அந்த புதரினுல் சிதைந்து கிடக்கும் உறவினை சிதைத்து விடாமல் பார்ப்பதே இரக்கம் குணம் கூறிப் போகின்றான் அரக்கனையும் விட கொடூரமான மானிடன் இன்று!

நான் ஒரு மார்க்கமாய்த்தான் கூறுவேன் அதனால் என்னை மடையன் என நினைத்து விடாதீர்கள்! மடையன் சில நேரங்களில் என் குமுறல் உங்களிடம் வந்து சேரலாம்!

விழித்து எழுந்து வரப் பாருங்கள் இங்கு மனிதர்கள் எனும் போர்வையில் மிருகங்கள் நடமாடிக் கொண்டு இருக்கின்றது!

நீங்கள் எழுந்து வர எத்தனிக்கும் நொடிகளில் உடல் சிதைந்து கொண்டு எங்காவது உடல் கிடக்கத்தான் போகின்றது!

தாமதிக்காதீர்கள் அவசரமாய் வரப் பாருங்கள் அநியாயமாய் அநாதையாக்கப்படும் குடும்பங்களை குதுகலாம் பார்த்திட...

பொத்துவில் அஜ்மல்கான்

கருத்துகள்