ஏமாற்றியது காதல்

ஏமாந்து போனது என் இதயம் ஏமாற்றத் தெரியாத காரணத்தால் எளிதாய் கிடைத்த பரிசு என்று எண்ணியேதான் எறிந்து விட்டதோ உன் இதயம் என் காதலை கோடைகாலம் ஆரம்பமாகிறது என் தலை கோதிய உன் விரல்கள் என்னை தள்ளிவிட்டுச் செல்கையிலே

கருமேகங்கள் கண்களை வந்து சூழ்கின்றது வான்மழை தீர்ந்ததால் என் கண்ணீரினை வாடகைக்கு எடுத்துச் செல்லவே

வாசணை திரவியமாய் உன் வார்த்தைகளை ஏற்றேன் வாசல் வரை வந்த உன் காதலோ வெறும் வார்த்தைகளில் மட்டும்தான் என்பதை உணராமல் ஏமாந்தது என்னிதயம் அல்லவா என்வரிகள் உனக்குப் புரிவது கடினம்தான் புதிரில்தானே தொடங்கியது நம் காதல் !

புதரிலந்த முயல் ஒன்று முட்களின் மேல் வாழ்வதாய் நானும் உன்னை இழந்து பலர் சொற்களின் மேல் வாழ்கிறேன் முடிவில்லா பாதை ஒன்று வேண்டும் ஏமாந்து போன என் காதலை எறிந்துவிட்டு திரும்பி வராமலிருக்க முகமிழந்து வாழ்கிறேன் உன்னை இழந்து இங்கு தவிக்கையில்

கவியிதழ் காதலன் ஐ.எம்.அஸ்கி அட்டாளைச்சேனை -08

கருத்துகள்