ஒன்றித்தாலே ஜெயம்

https://fbwat.ch/1yvVUKyMalnkuf2z

மண்வாசம் மகுடம் தாங்கி மனதோரம் வேற்றுமை நீங்கி மழைச்சாரல் ஆசிர்வதிக்க மகிழ்ச்சியாய் ஒன்றிணைந்தோம்...

முதல் நன்றி இறையோனுக்கே முடிவுவரை முகம் சுழிக்காது முழு மூச்சாய் கலமிறங்கி முயன்றோம் முடித்தோம்...

திருப்தி கொள்ளாத மனமும் பொருந்திக் கொள்ளாத குணமும் எல்லோருக்கும் ஏற்றம் தான்- இனி நாம் அதில் காணவோண்டியது மாற்றம்தான்...

தேற்றம் தோற்றத்தில் வரைந்தது போதும் முன்னேற்றம் இனி வளைந்து கொடுக்க வேண்டும்...

பாகுபாடு பார்க்க பறவையல்ல வேறுபாடு கேட்க எதிரியல்ல எடுத்தோம் கவிழ்தோம் ஏமாளியல்ல எம்மண்ணில் உதித்த முத்துக்கள் நாம்...

ஒற்றுமை ஓய்வெடுக்க நினைக்கிறதென்று ஒதுங்கிச் செல்வது முறையல்ல.. ஒவ்வாததென்று விலக்கி வைப்பது சரியல்ல...

ஓர் ஊற்று நீர்  ஒரு சுவைதான் தரும் ஒரு மரக்கனி ஓர் இனிமை மிகும்... ஒன்றிப்போம் உணர்வுகளால் ஒரு சேர்வோம் உறவுகளாய்...

குறைகள் மறைக்கப்படட்டும் நிறைகள் பேசப்படட்டும் புதுமை புகுத்தப்படட்டும் -என்றோ பூர்வீகம் பெருமை சொல்லும்...

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka
 

கருத்துகள்