ஓங்கி ஒலித்த குரல்

ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்து போனது... வானொலி காற்றலைகளில் கலந்து கதை பேசும் காந்த குரல்...

சிறியவர் முதல் பெரியவர் வரை பேரின்பத்துடன் கேட்டு இரசிக்கும் இரம்மியமான குரல்...

பலரை சாதனையாளர்களாக்கி சரித்திரம் படைத்த சமுத்திரம்... இலங்கை வானொலி வரலாற்றில் அழிக்க முடியாத ஆளுமை...

மாணவர்கள் மனம் கவர்ந்த அறிவுகளஞ்சியத்தின் அற்புதமான அறிவிப்பாளர்... சாதனையாளர்கள் சரிந்தாலும் சாதனைகள் சதா சப்தமிடும் சரித்திரத்தில்...

கலைஞர்கள் கண் மறைந்தாலும் கலையாது புகழ்- சாலைகள் முடிந்தாலும் பயணங்கள் முடிவதில்லை...

மண்ணை விட்டு மறைந்தாலும் மறுமையில் மலர கண்ணீருடன் கையேந்துகிறேன்....!

Rushdha Faris SEUSL

கருத்துகள்