காத்திருந்த காகிதம்

கவிதை எழுத காத்திருந்த காகிதங்கள் எல்லாம் கண்ணீர்த் துளிகளால் கரைந்து போன நாட்கள்தான் அதிகம்

கன்னியவளுக்கோ கல் மனம் காதல் என்பதோ என் மதமானதால் கரைந்து போனது அவள் சம்மதம்

காட்டுமரமென என் பேனா மையும் காய்ந்து போய் வீணாய்ப் போகுதே கட்டழகுக்காரி அவளோ கட்டுமரமாய் மாரி காதலில் தத்தளிக்கும் என்னை கல்யாணம் என்ற கரைகொண்டு சேர்த்து விடுவாளோ கல் மனதுக் காரியாச்சே கல்லரைக்கே அனுப்பி விடுவாளோ என்னை!

கன்னம் சுருங்கி அவள் சிரிக்கவே கழுத்துவரை கவிதை இருக்கும் எனக்கு நாணம் கடந்தும் நான் ரசிக்கவே நாட்கள் கடந்தும் பேனா காய்ந்திருக்கு ஓய்வூதியம் பெற்று விட்டதோ காத்திருந்த காகிதங்கள் எல்லாம் ஓரிரு வரிகள் கூட நிரம்பாததால் !!

கவியிதழ் காதலன் ஐ.எம்.அஸ்கி அட்டாளைச்சேனை-08
 

கருத்துகள்