உறவுகள் அருகில் இருந்தும் உணர்வுகள் தனிமையில் உளறல் காரணம் கானல்நீராய் நான்...
மகிழ்ச்சி மயக்கத்தில் மக்கள் மனம் மட்டும் ஏதேதோ ஏக்கத்தில் காரணம் கானல்நீராய் நான்...
சிரிப்பு சில்லரயாய் சிதறுகிறது எங்கோ சில்மிஷமாய் சிணுங்குகிறது விழிகள் காரணம் கானல்நீராய் நான்...
யார் யாரோ காவியம் படிக்கின்றனர் எனக்கே ஓர் ஓவியம் இல்லாமல் நான் காரணம் கானல்நீராய் நான்....
அகம் சீராக இசை தாளமாம் இசைகூட வசையாய் கனக்கிறது காரணம் கானல்நீராய் நான்...
சரீரத்திற்கு ஆரோக்கியப் பயிற்சி மரக்கட்டைக்கு எதற்கு கிளர்ச்சி காரணம் கானல்நீராய் நான்...
சொப்பனம் கானச்சொன்னார்கள் தப்பென்னம் கொன்று நகர்கிறது காரணம் கானல்நீராய் நான்...
மகான்கள் என்று பாரட்டுக்கள் மடமை எனக்குள் தாளாட்டுது காரணம் கானல்நீராய் நான்...
தினமோர் புவிச்சுழர்சி -எனக்கோ உதயமற்ற விடியல்கள் உதாசீனமாய் காரணம் கானல்நீராய் நான்...
தீராத வேட்கையில் வெற்றி -எல்லாம் தீர்ந்து போன சோகத்தில் நெற்றி காரணம் கானல்நீராய் நான்...
எட்டிப்பிடிக்க ஏராளம் வழிகள் வலிகள் தீர்க்க இல்லையே மொழிகள் காரணம் கானல்நீராய் நான்...
புரிந்து கொள்ள மனமிருக்க பிரிந்து செல்ல பித்தம் கொள்வதேன் காரணம் கானல்நீராய் நான்....
அழுவதற்கு கண்கள் உண்டு ஆறுதலுக்கு யாருண்டோ காரணம் கானல்நீராய் நான்....
Asana Akbar Anuradhapura SEU Of Srilanka
கருத்துகள்
கருத்துரையிடுக