குரங்கு மனசு பாகம் 03

"என்னம்மா நான் ஏதும் தப்பா சொல்லிட்டனா சர்மி?"

"இல்ல ஹபி"

"அப்போ என்னடா?"

"எனக்கு உங்க வீட்டுக்கு வர முடியாது."

"இன்னம் எத்துன நாளக்கி இப்புடியே இருக்க? யாராவது விட்டு குடுக்கனுமேமா..."

"உங்க உம்மா இன்னமும் பழச மறக்கல்ல ஹபி, அவக்கு பேசவும் தெரியாது. திரும்ப ஏதும் தப்பா பேசினா என்னால தாங்க முடியாது, ஐ யம் சொறி ஹபி"

கெஞ்சலுடன் கணவனைப் பார்க்க அவளை வருடி விட்டான் அதீக்.

"புள்ள நீங்க மருமகன் கூட முன்னால ஏறி கோங்க.. அவசரமில்லாம நிதானமா வாகனத்த செலுத்துங்க மகன்"

மகளுக்கும் மருமகனுக்கும் ஒரு சேர கட்டளை போட்ட தாய் ராபியா, அந்த குட்டி இளவரசியை சுமந்து கொண்டு பின்னால் ஏற, சர்மியின் கையைப் பிடித்து முன் இருக்கைக்கு  ஏற்றிவிட்ட அதீக் மாமியின் வேண்டுகோளுக்கு ஏற்ப மெதுவாய் தான் காரை செலுத்தினான்.

இங்கோ வாகனம் நகர வீடு நோக்கிய அந்தப் பயணம் சர்மியை வதைத்தது. தன் வீட்டார் செய்த தவறு இவ்வளவு பெரிய வருத்தங்களை தோற்றுவிக்குமென அவள் அறிந்திருக்கவில்லை. தன் மாமியின் உண்மை பாசத்தை உணர்ந்தவள் மாமியின் கோவத்துக்கான நியாயம் புரியாதவளல்ல.

"யா அல்லாஹ்! என் புருஷன் பெமிலி கூட என்ன அவசரமா சேர்த்து விடு" அந்த நிறைவேறா ஏக்கத்தோடே கணவனைப் பார்த்தாள் சர்மி.

"பெத்த உம்மாவையும், கட்டிய பொண்டாட்டியையும் மனசு நோகாம வெச்சிக இந்த மனிஷன் எவ்வளவு கஷ்ட பட்றாரு. தான் செஞ்ச தப்புக்கு இவர் தானே தண்டனய அனுபவிச்சிட்டு இருக்காரு. எப்புடி ஹபி உங்களால இப்படி எல்லாம் இருக்க முடியுது?" அவள் உள்ளம் வெந்து அழ, மனதால் மட்டுமே அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

"சர்மி.. என்னா சைலன்ட்?" அதீக் தான் பேச்சுப் போட, அவள் காதுகள் வாங்கிக் கொள்ளவில்லை..

"சர்மி, ஹலோ... மெடம்?"

"ஆஹ் நா.. நான் ஆஹ்?"

"என்னடா? என்ன யோசின?"

"நோ.. ஜஸ்ட்.."

"ஹ்ம்ம்ம் ஓகே.."

"ஹபி..?"

"என்னம்மா?"

"கார திருப்புங்க."

"ஏன்? எங்க போக?"

"என் மாமிய பார்க்கனும்."

ஹே என்னடா?

"பிளீஸ் ஹபி.."

தேம்பித் தேம்பி அழுதாள் சர்மி.

"என்ன புள்ள உனக்கு? அங்க எதுக்கு போகனும்?"

உம்மா நீங்க வாய மூடுங்க, நான் போக தான் வேணும்." மகளின் உறுதி கண்டு உறைந்து போன தாய்க்கு சர்மியின் செயல் சரியாகவே பட்டது.

"சரி போவோம் மகன்"

"என்ன மாமி நீங்களுமா?"

"நான் போக வேணும் ஹபி, புரிஞ்சி கோங்க.."

"சரி சர்மி இது ஹாஸ்பிடல்ல இருந்து வாரதுமா, வீடு போய் ரிலக்ஸா வருவோம், ஓகேயா?"

"நோ.. நோ ஹபி.. நான் அவவ இப்போ பாக்கனும், எனக்கு அதபத்தி கவல இல்ல..."

"யா அல்லாஹ்! சர்மி இப்போ என்ன உனக்கு திடீர் பாசம்? அவ உனக்கு ஏசுவா, எங்க உம்மா பத்தி தெரியும் தானே? இப்போ உன்ன கண்டாவே அவக்கு புடிக்காது.

"தன்னோட பேத்திய அவகிட்ட காட்டனும் ஹபி."

"சரி இப்ப வேணாம்மா.."

"நான் போக வேணும்னு சொல்றன் தானே ஹபி?"

"சர்மி..??"

"பிளீஸ் ஹபி.."

"ஐயோ! ஏதும் நடந்தா நான் பொறுப்பு இல்ல சொல்லிட்டன்."

"சரி கார திருப்புங்க"

மனைவியை சமாளிக்க முடியாது என்பதை ஊகித்துக் கொண்ட அதீக் "இவளுக்கு என்ன நடந்திட்டு?" என தனக்குத் தானே கேட்டுக் கொண்டு, என்றுமில்லா பயத்துடன் வாகனத்தை திருப்பினான்.

கதை தொடரும்… Aathifa Ashraf

கருத்துகள்