அடுத்தநாள் காலை நீண்ட நாட்களுக்குப் பின் உம்மா சமைத்த மணிப்புட்டை ருசித்துக் கொண்டிருந்தாள் சர்மி. நேரம் பார்த்து மகளின் பக்கத்தே வந்தமர்ந்து கொண்ட ராபியா,
"புள்ள உம்மாட ஆச படி உன்ன நல்ல எடத்துல இருந்து கேட்டு வந்திருக்கு. பையன் மாசம் லெட்சக் கணக்கு சம்பாதிக்குறான். நல்ல பெரிய இடத்து பெமிலி ரொம்ப நல்ல இடம்மா"
தன் விருப்பங்களுக்கு புறம்பாக தாயின் வார்த்தைகளமைய, கையில் வைத்திருந்த உணவை வாய்க்குள் போடாமல் அப்படியே உதறிவிட்டு எழுந்து நின்றாள் சர்மி.
"என்னம்மா? இப்பவே என்ன அவசரம்? ஆசாசயா படிச்சிட்டு இருந்த மத்ரஸால இருந்து விலக்கியே கூடிட்டு வந்துடீங்க இப்போ கலியாணம் அது இதுன்னு சொல்லிட்டு என்னம்மா இது?
"அதில்ல புள்ள அவங்களா கேட்டு வந்திருக்ககுள்ள இந்த நல்ல விஷயத்த எதுக்குமா மிஸ் பண்ணனும்?"
"ஐயோ இப்போ இது எல்லாம் வேணாம்மா.."
"ஏன்? எதுக்கு வேணாம்னு சொல்ற சர்மி? நல்ல இடங்கள மிஸ் பண்ணிட்டு அப்புறம் நாம தான் பீல் பண்ணனும்."
"உம்மா இங்க பாருங்க, நீங்க சொன்னதுக்கு என்னால அந்த ஆட்டோ டிரைவர மறக்க முடியாது. பிளீஸ்மா புரிஞ்சி கோங்க.."
"என்னடி? பைத்தியமா உனக்கு? அது நடக்காது சர்மி.."
"அப்போ என்ன என் பாட்டுல இருக்க விடுங்கமா. எனக்கு இப்போ கலியாணம் தேவல்ல"
"என்ன சர்மி? புள்ள புள்ளன்னு நானும் பார்த்து பார்த்து இருந்தா நீ என்னயும் உதச்சி விட்டுட்டு போவாய் போல தான் இருக்கு."
"நீங்க என்ன வேணுமோ நெனச்சி கோங்கமா, ஆனா அவர போல ஒருத்தர் ஏன்ட லெய்ப்ல கெடச்சாது. நான் அவர தான் கலியாணம் பண்ணுவன்மா..."
"என்னா? என்ன தைரியம்டீ உனக்கு? இந்த உம்மாவ பார்க்க அவன் முக்கியமா போயிட்டா உனக்கு?"
"ஐயோ அப்படி இல்லமா.. பிளீஸ்மா" விம்மி விம்மி அழுதாள் சர்மி..
"இங்கபாரு சர்மி.. திரும்ப சொல்றன். உனக்கு நான் வேணுமா இல்ல அவன் வேணுமான்னு நீயே முடிவு பண்ணிக்க, அவன் தான் வேணும்னா, இந்த உம்மாவ உனக்கு பார்க்க கெடச்சாது.
"உம்மா.. உம்மா ப்ளீஸ்" மகளின் கெஞ்சுதலைப் பொருட்படுத்தாமல் கோவத்தோடு நகர்ந்தாள் ராபியா..
"ஏன்ட யா அல்லாஹ்! ஏன் என் உம்மாவுக்கு இப்புடிக் கல்லு மனசு? என்னால முடியல்லயே! ஒரு ஆட்டோ டிரைவர்னு சொல்லி என் மனசுல இருக்குறவர ஒதுக்குறாங்க, என் உம்மாவுக்கு புரிய வெச்சிடு ப்ளீஸ் அல்லாஹ்."
[ebayfeedsforwordpress feed="https://www.ebay.com/itm/333490140473" items="கவித்தொகுப்பு"]ஓடிச் சென்று கட்டிலில் குப்புறப் படுத்துக் கொண்ட சர்மி, தேம்பித் தேம்பி அழுதாள். அப்பொழுது தான் அந்த சம்பவமும் நடந்தது. ஆம் சர்மியைப் போலவே தனக்கு இவள் தான் துணையாக வாய்க்க வேண்டுமென்பதில் உறுதியாய் நின்ற அதீக், தன் வீட்டாருடன் பேசி அனைவர் சம்மதத்துடனும் குடும்பமாகப் பெண் கேட்டு வந்தான் சர்மி வீட்டுக்கு.
யாரோ கும்மளாக வீட்டு வாசலில் வந்திருக்கவே முன் ஹோலில் அமர்ந்திருந்த ராபியா சத்தம் கேட்டு கதவை திறக்க, அந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் வந்திருக்கக் கண்டு கொதித்தெழுந்தாள்.
இங்கு பெண் கேட்டு வரும்வரை சர்மி மத்ரஸாவிலிருந்து வீடு வந்ததிருப்பது தெரியா அதீக், தன் மனதில் செதுக்கியவளை இன்று காணக்கிடைக்குமெனவும், பிற்பாடு நடக்க இருக்கும் அசம்பாவிதங்கள் குறித்தும் கனவிலும் அறிந்திருக்கவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக