சினம் கொண்டது ஏனும்?? சின்னதாய் ஒரு சிரிப்பு போதும் சிநேகிதத்தை வளர்க்க..
எள்ளல் சிரிப்பு வேண்டாம் ஏளனச் சிரிப்பும் வேண்டாம் ஏமாற்றச் சிரிப்பும் வேண்டாம்...
எதிரில் வருபவனை பார்த்துச்சிரி எதிரி கூட நண்பனாவான்..
கோமாளிச் சிரிப்பு வேண்டாம் கோத்திர வெறுப்பும் வேண்டாம் கோபத்தில் சிவந்த முகம் கொஞ்சம் மூர்கம்தனிந்து மலரட்டும்....
தொண்ணூற்ரெட்டில் துவக்கமாம் உலக சிரிப்பு தினம் தை பத்தில்...
புன்னகைக்க நாளெதற்கு புண்ணியம் தேட காத்திருப்பா...
இதழ்கள் வளைந்துகொடுக்கிறது இதயம் அதை ஏற்க மறுக்கிறது..
ஏழை பணக்காரனென்று ஏதோ மனம் விலாசம் தேடுகிறது...
பல்லித்துச் சிரி பாசத்தோடு இரு வாய்த் திறந்து சிரி வாழ்க்கையை சுவைத்திரு...
சிரிப்போம் சிந்திப்போம் சிரித்து மகிழ்விப்போம் சிந்தித்துச் சிரிப்போம் சிறப்போடு வாழ்வோம்....
Asana Akbar Anuradhapura SEU Of Srilanka
கருத்துகள்
கருத்துரையிடுக