தங்கை

தாய்மடி உறக்கம் தருவேன் என் தங்கமே தாரகையாய் செல்லும் முன் என் மடியில் உன்னை வைத்து தாலாட்டுப் பாடுகிறேன் என் தங்கமே

செல்லாமய் நீ சண்டைபோட சின்னதாய் கோபம் கொள்ளவா உன் கோபத்தை ரசித்திட என் தங்கா தங்கையே நீ தலைநிமிர்ந்து நடந்திட செல்லமாய் தலையில் தொட்டி கொட்டி உன்னை கண்டிக்கிறேன் தங்கா

தங்கையே ஒருபோதும் நினைத்து விடாதே கோபத்தில் உன்னை கொஞ்ச மறந்தேன் என்று என் வயிற்றில் சுமக்காத முதல் குழந்தையும் நீதான் உன்னை கருவில் சுமக்காத முதல் தாயும் நான் தான்

ஒரு ஜீவனின் இரு கருவாய் வாய் பிறந்தோம் ஈருலகம் அழிந்தாலும் உனக்கு தோள் கொடுக்கும் தோழியாய் உனக்கு அறிவுரை சொல்லும் தந்தையாய் உன்னை அரவணைத்திடும் தாயாய் நான் இறப்பேன் என்றும் உனக்கு அக்காவாய்

கவிதை காதலன் அக்குரணை லஷாட்

கருத்துகள்