விடியல் இல்லாத தீவு தென்றல் நுழைந்திடாத குடிசை எதிரியுமில்லை எதிரிலும் யாருமில்லை பாசம் என்ற பெயரில் பாசாங்கு காட்டும் உறவுகளும் தேவையில்லை
தனித்தீவில் தனிமையில் நீந்திட போகிறேன் உன்னோடு அல்ல உன் நினைவுகளோடு பாசத்தை உன்னிடம் படித்த பாவத்திற்கு
கருசுமந்தவளோடு தோள் சாய்ந்ததில்லை கருவிழியில் உன்னை சுமந்திருக்கிறேன் பாசம் என்ற அடைமொழியை கற்ற பாவத்திற்கு உன்னிடம்
தாயவள் மார்பில் தூங்கியதில்லை என்றாலும்- இதயத்தை உன்னோடு வைத்து தூங்கிய பழகிய பாவத்திற்கு தவிப்புகளின் நீந்துகிறேன் தினம் கண்ணீர் விட மறந்த மழலையாய்
கருவறை இருளில் கூட தயங்கியதில்லை கனவுகளின் இருளை கண்டு தயங்குகிறேன் காணாது போகும் என் இதயத்தை ஒரு முறை கீறி கிழித்து கழுவிடு உன் விரல் தொட்டு வாழ்ந்திடட்டும் ஒருநொடி
அனுகவி றிப்கான், அட்டாளைச்சேனை-06
கருத்துகள்
கருத்துரையிடுக