தாயின் சேலை

முப்பது சேலைகள் உன்னிடம் இருந்தாலும்

ஏனோ அம்மா எனக்கு

ஊஞ்சல் கட்டி அழகு பார்த்தாய்

உன் அழகு மேனியில் கட்டி

அழகு பார்க்க மறந்து போனாய்

முள் வேலியில் சிக்கி

அங்குமிங்குமாய் சிறு

கிளிஞ்சல்களோடும் இருந்த

அந்தச் சேலையில் மட்டும் தானே

உன் மேனி அழகு கண்டது

விதம் விதமாய் சேலைகள் அணிந்து

அழகு பார்க்கும் மங்கையர் மத்தியில்

தன் குழந்தைகாய் உன்னழகு சேலையில்

ஊஞ்சல் கட்டி உன் சிறு கிளிஞ்சல் சேலையில்

உன் மேனியை முத்தமிட செய்து

உன் மார்பகங்களோடும்

என்னை கட்டி அணைத்து

நீ தந்த தாய்ப்பால் நான்

பெற்ற முதல் பொக்கிஷம்தான் அம்மா

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

கருத்துகள்