ஒன்றித்தோம் ஒருமித்தோம் ஓரணியாய் ஒன்று சேர்ந்தோம் ஓராண்டுகள் ஒருங்கே ஓடி ஈரண்டுகளில் இணந்திருந்தோம் இனிது இனிது.
எம் நட்பு வட்டாரம் பெரிதிலும் பெரிது மீண்டும் ஒரு காலம் வருவது அறிதிலும் அறிது.
ஒவ்வாத முனைகளாய் நாமிருந்தும் ஒட்டி உறவாடினோம் ஒன்றாக நாம் சேர்ந்து வாழ்ந்த தருணங்களில் நாம் சோர்ந்து போனது கிடையாது.
உடம்பிலே வேறாணோம் உணர்விலே ஒன்றானோம் ஒரு கருவில் உருவாணோம் நானின்றி நாமானோம்.
வரையறை தந்த வாழ்க்கை வரைவிலக்கணமில் நட்பு- புது வரலாறு படைப்போம் வாரீர் வர்ணனை இங்கு இல்லை.
ஆயுள் தந்த அழகான சிறை அதில் ஆண்டுகள் 2 நிறை ஆவியில் இருப்பதோர் அறை அதில் அன்பிருக்க நமக்கென்ன குறை.
தொடரும் வாழ்க்கையில் -நாம் படரும் கொளுகொம்பு நீ மலரும் வசந்தத்தில் - புது மணம் பரப்புவோம் நாம்.
காலம் அவகாசம் தருகிறது உன்னை புரிந்துகொள்ள கடிகாரம் சுழல்கிறது உன்னை கடந்து செல்ல.
உதிரம் ஒன்றாகி உருவானதே இரத்த உறவு நம் இதயம் ஒன்றாகி உருவானதே இழையோடும் நட்பு.
அன்பை பரிசளிக்கிறேன் அன்பர்களே உமக்காய் புன்னகையை பரிசளிக்கிறேன் -நீ எனை புரிந்துகொள்வாய் என்பதற்காய்.
பிரிந்து செல்ல நொடி போதும் புரிந்து கொள்ள யுகம் வேண்டும் புரிக்கணிப்படாதது அன்பு - மீண்டும் புணர் நிர்மாணிக்க வேண்டியதேம்
Asana Akbar Anuradhapura SEU Of Srilanka
கருத்துகள்
கருத்துரையிடுக