அண்ணா மாரே அப்பா மாரே மாமா மாரே எங்களையும் உங்களில் ஒருத்தியாய் நினைத்து பார்க்க மாட்டேர்களா!
நாங்கள் உங்களிடத்தில் கள்ளம் கொள்ளாது பழகுவதனால் பரிதாபமாய் எங்களிடத்தில் பாசம் காட்டி சிதைப்பது ஏனோ!
எங்களை சிதைத்துப் போகும் மாமா, அண்ணா, அப்பா மாரே உங்களை ஈன்றெடுத்தவளையும் கொஞ்சம் நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்!
எங்களைக் காக்க யாருமில்லை காத்திட இருப்பவனின் காமத்திற்கும் பசியாகின்றோம் எதற்காய் படைத்தானே இந்த இறைவன் இரக்கம் இல்லாத அரக்கர்களிடம்!
வழிகள் எதுவும் கிடைத்திடப் போகுமா நாங்கள் வலிகளுடன் கிடக்கின்றோம் பதில் தாருங்கள்!
பொத்துவில் அஜ்மல்கான்
கருத்துகள்
கருத்துரையிடுக