''சின்னக்கா.... ஓ கூட முக்கியமா பேசணும்....''
''ம்... கொஞ்சமிரு.... டிரஸ் மாத்திட்டு வந்துடுறன்''
பவித்ரா இப்போது அந்த வீட்டில் நடந்த ஒவ்வொரு விடயமாக அசை போட்டபடியிருந்தாள். 'இந்த விசயத்த கார்த்திக் மச்சான் கிட்ட கேட்டு பாக்கலாமா?' திடீரென யோசனை தோன்ற அவனை நாடிச் சென்றாள். முன் ஹாலில் ஏதோ பத்திரிகை யில் நோட்டம் விட்டவனைப் பார்த்து
''கார்த்திக் மச்சான்.... ''
''ஹா.... வா...வா... பவி... என்ன விசயம்...'' பத்திரிகையை மடக்கியபடியே கேட்டான்.
''அது வந்து.... விக்னேஷ ஒங்களுக்கு தெரியுமா?''
முகத்தில் நகையொன்று தோன்றி மறைய ''ஆ... அவன் என்ட பிரன்டுபா. ஏ கேகுற?'' விழிகளில் கேள்வி தென்படவே,
''இல்ல... அவன் எங்க ஒபீஸ்ல தா இருக்கான். ''
''ஆமா.... அவனோட தம்பியும் அவனப் போலவே இருப்பான் . நீ பாத்திருப்பியே அங்க?'' அவ்வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் கண்முன்னே வந்தது போலொரு எண்ணம் ஓடவே அமைதியாக இருந்தவளைப் பார்த்து,
''என்ன காணலியா?'' அவனது கேள்வியால் சுயநினைவுக்கு வந்தவள் போல ''ஆமா.... ஆமா...''
''ம்... அவனுக ரெண்டு பேரும் ரெட்ட மாதிரி தா இருப்பானுக. ஆனா கொணம் ரொம்ப டிபரன்ட்'' சிரித்துக் கொண்டே கூறியதும்,
''ஓ... பாத்ததுமே வெளங்கிச்சு...'' பல்லைக் கடித்தவள் 'அண்ணன போல தானே தம்மியும். பொருக்கி..' மனதால் அவனை வைதாள்.
''என்ன இங்க கத போகுது. பவி... ஒனக்கிட்ட ஒன்னு கேப்பன்.''
கல்யாணி கேள்வியுடன் அவளைப் பார்த்துவிட்டு மீண்டும் ''எங்க கூடயே இருந்து ஒபீஸ் போவேன்? பிளீஸ்...''
முகமலர்ச்சியுடன். ''தாராளமா சின்னக்கா...'' என்றாலும் அவள் மனதோ 'ஓகிட்ட நானே கேக்கலானு இருந்த. இங்க இருந்தா தா ஏ காரியம் கச்சிதமா நடக்கும்' நினைத்து புன்சிரிப்புதிர்த்தாள்.
''சரி... பவிகூட ஒனக்கு இனிமே தனிம யில்ல...'' பற்கள் தெரியும் படி சிரித்தான்.
''ஆமா... ஆமா... நல்ல தங்கச்சி...'' ஆனந்த மிகுதியில் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். வரவேற்பரையில் மணிச் சத்தம் கேட்கவும் கார்த்திக் அவசரமாக ஓடினான்.
''ஆ... நீயா? வா... உள்ள...'' உரத்த குரலில் கூறிவிட்டு ''கல்யாணி.... கல்யாணி...'' பெருங் குரலெடுத்துக் கூவியதுமே அவள் பவித்ராவின் முகத்தைப் பார்த்து விட்டு நடந்தாள்.
'யாராக இருக்கும்' எட்டிப் பார்த்தவளுக்கு ஐம்புலனும் அடங்கியது போலானாள். 'சீ இவனா?'
''நம்ம வினோத் தம்பி... வாங்க....'' கல்யாணியின் குரல் கேட்டு அறைப் பக்கமாக ஓட்டமெடுத்தாள்.
''ஏன் இங்கயும் வந்திருக்கான் இடியட்...'' முணுமுணுத்துக் கொண்டே கதவை மூடினாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக