நினைவுகளில் வாழ்கிறாய் நீ

தடுக்கி விழும் போது எல்லாம் தாய்மடியாய் தனியிடம் கொடுத்து தாங்கி பிடித்திட்டாய் தனிமையில் தவிக்கிறேன் உன் துணையின்றி தடுமாறி தடம் புரள்கிறேன் நானடி

நிலவு இன்றி கதிரொளியும் சுழன்றிடுமா நீ இன்றி என் நிழலும் வாழ்ந்திடுமா நிதர்சனம் தெரிந்து கொண்ட பின்னும் நீ குறைகுடமாய் தளும்புவது ஏனடி

வெற்றுப்பாத்திரமாய் கரல் படிந்து  கிடந்த என்னுள்ளத்தில் சில்லறையாய் வீசி விட்டாய் உன் அன்பினை பொங்கி நிறைகிறது ஏக்கங்கள் என்னுள் உன் நினைவுகளின் கோட்டைக்குள் தனிமையில் நான்

வந்து விடு என்னோடு வாழ்ந்திட வாடகைக்கு விட்டு சென்று விடாதே இன்னொருத்தி வந்து பூகம்பம் செய்திடும் நிலைமைக்கு நிர்க்கதியாய் மாற்றிடாதே என்னை....... நினைவுகளில் வாழ்கிறாய் நீ என்னில்…… நிஜத்திலே வந்து விடு.......

அனுகவி றிப்கான் அட்டாளைச்சேனை-06

கருத்துகள்