நெடுங்காலத்தில் பின் ஓர் பனிவிழும் இருளில் மீண்டும் என்னுள் கரைபுரண்டது அவளது நினைவுச் சுவடுகள் அவள் நடத்திய காதல் நாடகத்தின் அன்றைய காதாநாயகன் நான்
நிகழ்காலத்தை எதிர்காலமாய் எண்ணி அவளை மனைவியாக்கிக் கொண்டேன் கனவில் அவளுடைய மென்மையான ஸ்பரிசங்கள் என் சுவாசக்கீற்றை சூடேற்றியது
பட்டாம்பூச்சியாய் வட்டமடித்தேன் வசந்தமாய் அவள் வருவால் என்று வீட்டு சூழ்நிலையில் சிறைக்கைதியை மாட்டிக்கொண்டேன்
நீ என்னை மறந்து விடவும் என்ற கடிதம் மட்டும் முடிவுரையாய் காலம் கடந்தும் கற்புடன் இருக்கிறது என் காதல் அவளது வாருகைக்காக அல்ல என் வாழ்க்கைக்காக
கவிதை காதலன் அக்குரணை லஷாட்
கருத்துகள்
கருத்துரையிடுக