இயந்திர உலகமதில் கட்டுண்ட நமக்கிங்கு இரத்தபந்த உறவுகளுடன் உலாவர நேரமில்லை
மோகமெனும் போகமதில் மூழ்கியுள்ள நமக்கிங்கு சமூகமதின் எழுச்சியில் சாமார்த்திய சிந்தனைகள் கட்டியெழுப்ப நேரமில்லை
ஆளுமைகள் நாம் வளர்த்து ஆட்சி செய்ய தயாரில்லை பூர்வீக நம் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க நேரமில்லை
தேவையுடையோர் நிலை கண்டு உதவி செய்ய நேரமில்லை ஏழை கண்ணீர் பல எண்ணிப் பார்க்க நேரமில்லை
படைத்தவன் அல்லாஹ்விடம் பாரம் சாட்ட தயாரில்லை அதிசயப் படைப்புக்களை சிந்திக்கவும் நேரமில்லை
நாளைய மறுமையின் வெற்றிக்காய் முஹாஸபா செய்யவேனும் நேரமில்லை
பணத்தாசை நாம் கொண்டு பண்பாடுகள் நாம் மறந்து பரபரப்பான உலகமதில் குறுகிய மனப்பாங்குடனே வாழ்வதுதான் ஏற்றதுவோ?
நேரமில்லை நேரமில்லை எனும் புலம்பலோ நமக்குள் ஓயாது ஒலிக்கவே நேரமெனும் அருட்கொடையை நமக்களித்த வல்லோனின் கட்டளையை ஒரு கணம் சிந்திப்போம்
J.Noorul shifa 2nd year SEUSL
கருத்துகள்
கருத்துரையிடுக