பட்டதாரிங்கன்னா சும்மாவா?

வேல செஞ்சு கலைச்சு போனவங்கள விட வெட்டியா இருந்தே வீணா போய்டுவோம் போலஜனவரிக்குள் பட்டதாரிகளுக்கு நியமனம் னு மெசேஞ் தட்டிவிட்டாங்கல்ல எங்க பதியனும்னு தல தெரிக்க கச்சேரிக்கும் கவுண்டருக்கும் அலையுதுங்க புள்ளைங்க அங்க சுத்தி இங்க சுத்தி அடுப்பங்கரை தான் கெதின்னு பொண்ணுங்க பேச்சு வாங்கவும் படிச்சத்துக்கு பட்டு போட்டுட்டு பசங்க கிடைச்ச வேலைய செய்யவுமா பதினாறு வருடம் படிச்சது? இதுக்குள்ள காலேஜ் போயிருக்க இந்த நிலம வந்திருக்குமான்னு வசை வேற! பொழுது போகலன்னா கெளம்பிடுறது படிச்சு முடிச்ச எங்களயும் படிக்க வச்ச தாய் தகப்பன குற சொல்ல இலை உதிர காலமுள்ளத போல காய் கனியாக காலமிருக்கு! நம்ம வேலைய நாம பார்த்துகிறம் கெளம்புங்கய்யா காத்து வரட்டும்!
கவிச்சாரல் சாரா

கருத்துகள்