எந்தன் அருமை மகனே நீ வந்த பின்னர் தானே எங்கள் கவலைகள் கலைந்தன!
உந்தன் வனப்பில் தானே நாம் எமை மறந்தோம்!
நீ சிரித்ததில் தானே மின்னும் நட்சத்திரங்கள் பல உதிர்வதைப் பார்த்தேன்!
நீ பேசிடத் தானே மொழிகளில் இனியது மழலை என நானறிந்தேன்!
நீ தான் எந்தன் முக்காலமும்! நாம் எப்போதும் நிகழ்காலத்திலேயே பயணிப்போம்! என்றும் எந்தன் ஒரே மகனாக நீ வளர்ந்தாலும் எந்தன் மழலையே!
உந்தன் அறிவும் ஆயுளும் வானளவு உயர வேண்டும்!
இரணமும் ஆரோக்கியமும் கடலளவு நிறைய வேண்டும்!
சோதனைகளைத் தகர்த்தெறிய வேண்டும்! நீ சாதனைகள் பல படைக்க வேண்டும்! நீ புகழ் பல பெற வேண்டும்!
என்றும் இறையருள் உனைத் தேடி வர வேண்டும்! எந்தன் அன்பின் செல்வமே!! இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
என்றும் அன்புத் தாய் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS: 2 Pasyala
கருத்துகள்
கருத்துரையிடுக