மலர்ந்திருக்கும் புதிய வருடத்தில் மாற்றங்களை நோக்கி நடைப்போடுவோம் வாரீர்...
குரோதம், துரோகம் பழி, பகட்டு அனைத்தையும் அழித்துவிட்டு - அன்பை பரிமாறுவோம் வாரீர்...
இன,மத, மொழி பேதமின்றி ஒன்றாக இணைந்திடுவோம் வாரீர்...
ஒன்றாக கைக்கோர்த்து தள்ளாடும் சகோதரர்களை தாங்கி பிடித்து உதவி கரம் நீட்டும் உன்னத மனிதர்களாவோம் வாரீர்...
சந்தர்ப்பங்களை சாதனைகளாக்கி சரித்திரம் படைப்போம் வாரீர்...
துன்பங்களை துரத்திவிட்டு இன்பங்களுடன் இணைந்திடுவோம் வாரீர்...
சாந்தியையும் சமாதானத்தையும் பாரெங்கிலும் பரப்பிடுவோம் வாரீர்...
தன்னம்பிக்கையை தன்னகத்தே கொண்டு - கனவுகளை நனவாக்க வாரீர்...
இதழ் விரித்திருக்கும் இனிய வருடத்தை இணைந்து வரவேற்போம் வாரீர்......!

கருத்துகள்
கருத்துரையிடுக