நீதி கேட்க தயங்குறேன்டி நாலு பேர் முன்னால் தன் நிலை கூற நடுங்குதடி இத்தனையும் விட தன் மானம் மீது பாயும் கயவர்களை தட்டி கேட்டிட செத்து பிழைக்கிறேன்டி காரணம் நான் ஒரு பெண்
பொட்ட புள்ள உனை வளர்க்க உன் தாயின் அடி மடியில் கனமேறுதடி ஆனாலும் துடிக்குதடி நெஞ்சம் தடையற வாழ்ந்திட
வீட்டுக்குள்ள பூட்டி வச்சி சுதந்திரம் தந்த ஆண்களே கொஞ்சம் கண் தொறந்து பாருமைய்யா இந்த பொட்டபுள்ள வாழ்கைய
மாதவிலக்கும் அவளை வலியோடு விலக்கியே வைத்துவிட்டது சுமை தாங்கி அவள் சுமக்கிறாள் இன்னோருயிரை துடிக்குறாள் அவள் பிரசவ வலியினாள் அப்போதும் அவள் உணர்வது வலி மட்டுந்தானடி
பெண் நிலை வகிப்பதும் துயரே அந்நிலை வாழ்வதும் துயரே

கருத்துகள்
கருத்துரையிடுக