வாழ வறுமை தடையல்ல

இல்லாததற்கு அருமை காரணம் வறுமை இருப்பவருக்கு பெருமை காரணம் அவரவர் உடைமை...

தேடலிருக்கும் தினம் தேவை இருக்கும் நிதம் திறமை தம் கைவசம்-இதன் திருப்பம் எங்கனம்...

வாழத் தெரிந்தவனுக்கு வறுமை பொருட்டல்ல வையத்தில் கண்டதெல்லாம் வளமாய் பயன்படுத்துவான்...

இல்லாததை எண்ணியெண்ணி இருப்பதை மறைத்துக்கொள்வதேன் இரு கைகள் இருக்கதென்றால் இருமாப்போடு திருப்தி கொள்வான்...

தட்டுவதற்கு கைகள் இருக்கையில் தம்பட்டம் தான் தேவையென்றில்லை தகரத் துண்டிலும் தாளம் வரும்...

உள்ளத்தில் தைரியமும் உள்ளதில் திருப்பதியும் உயிர் வாழ வைக்கும் ஊட்டச்சத்துக்கள் எனலாம்....

புலமை இருக்கையில் புதுமை படைக்கலாம் பழமை இருக்கையில் பகற்கனவும் காணலாம்...

எட்டிப்பிடிக்க ஏனிப்படி இருக்கையில் 'ஏரோப்பிளைனுக்கு' காத்திருக்க தேவையில்லை...

தெரிந்தவர் இகழ்வர் தம்வசம் உள்ளதால், தெரியாதவர் மகிழ்வர் தன்னம்பிக்கைகொண்ட உள்ளத்தால்...

வேட்டைக்கு ஆயுதம்தான் தேவையென்றில்லை வீரனுக்கு வீரியம் போதும் விடா முயற்சி எய்தும் வெற்றி வாகை தானும்..

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka

கருத்துகள்