I CAN "என்னால் முடியும்"

கல்வி கற்கும் மாணவர்களுடன் ஒரு சில நிமிடங்கள்

"கடந்த ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை புரட்டிப்பார்த்தால் கல்விக்கு மிகச்சிறந்த பங்களிப்பை இஸ்லாமிய சமூகம் வளங்கியுள்ளதை பார்க்கலாம்."

'ஒரு காலத்தில் மருத்துவம், அறிவியல், கணிதவியல், துறைகளில் போதுமான பங்களிப்பை செய்து வந்த சமூகம் இன்று கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகமாக மாறிப் போனது ஏன்?'

'எந்தவொரு இலக்குகள் கூட இல்லாமல் பயணிப்பதேன்?"

'பணம் சம்பாதிப்பது தான் இலக்கா?'

'மாடமாளிகளை கட்டுவது தான் இலக்கா?'

'உயர்தர வாகனங்களில் செல்வது தான் இலக்கா?'

ஒவ்வொருவரும் மனதால் கேட்டுக்கொள்ளவேண்டிய விடயமாகும். அன்று "வாசிப்பீராக" என்ற முதல் இறைக்கட்டளையின் மூலமே எமது வரலாறு தொடங்கியது. எனவேதான் அன்று அறிவியலின் காலமாக இருந்த நேரத்தில் இஸ்லாத்தின் காலம் அறியும் காலமாக மாற்றியது. 'வாசிப்பீராக' என்ற இறைக் கட்டளை. "எமது வேதத்தின் அற்புதமே "கல்வியே" இதுவே குர்ஆன் சான்று பகர்கிறது.'

கல்விக்கடலில் அறிவுத் தாகம் தீர்த்து வாழ்க்கையில் அறிய பல சாதனைகள் படைக்கும் இலட்சியக் கனவுகளோடு வாழ்க்கையின் நொடிப்பொழுதுகளை மிகக் கவனமாக கச்சிதமாக கழிக்கவேண்டிய பெருமதியான பருவமே கல்விகற்கும் பருவம் ஆனால் இன்று எது எதற்கோ அடிமையாகி ஆசைகள் இலக்குகளுக்கு பூட்டுப் போட்டுள்ளதை அறிகிறோம். Phone, drugs, entertainment என்று நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பதை காண்கிறோம். எதையும் சாதிக்கத் தூண்டும் பருவம், ரத்தம் சூடாகி இருக்கும் பருவம். ஆனால் சிந்தனைகளைச் சிதறடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை ஒரு இலக்கு இல்லாமல் ஏனோதானோ என்று கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

தாய் தந்தையரின் ஏக்கம், கவலை, பணம் இது ஒன்றையும் பொருட்படுத்தாமல் படிப்பதுபோல் நடிப்பு இதனால் யாருக்கு ஏமாற்றம்? அவர்களுக்கா? இல்லை எங்களுக்கே என்பதை மறந்து விட வேண்டாம். யாரும் சலைத்தவர்கள் அல்ல. உன்னால் சாதிக்க முடியும் என்று நினை சாதிப்பாய். எதுவும் எங்கள் முயற்சியை பொருத்தே விளைவுகளை அடையலாம்.

உழைப்பு இல்லாமல் ஒரு தாணியத்தையாவது உற்பத்தி செய்ய முடியுமா? எனவே ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது திருப்பி எடுக்க முடியாது. எனவே இந்த நிமிடத்தை உனது இலக்கிற்காக கொடு பிறகு ஒரு நாள் உன் நிமிடங்களுக்கு விலைபேசுவார்கள். இந்தப் பருவம் ஒரு முறை என்பதை மறந்து விடாதே.

Faslan Hashim Islahiyya Arabic collage ® South Eastern University of Sri Lanka. BA ®

கருத்துகள்