அன்பு

அத்திவாரம் இட்டு ஆழஅகலம் பார்த்து இருப்பதை தெரிந்துகொண்டு ஈட்டி இதயத்தில் பாய்வதல்ல - அன்பு...

உத்தரவு வாங்கி ஊதியம் அறிந்து எல்லாமே புரிந்து -பின் ஏமாற்றி போவதல்ல -அன்பு...

ஐயம் நிலைத்து ஒவ்வாமை மிகைத்து ஓடி ஒழியும் கொடிய ஔடதமல்ல - அன்பு..

அகிலத்தின் துவக்கத்திலே ஆண்டவன் விதைத்தது இதயத்தை இருப்பிடமாய் கொண்ட ஈருளிப் பயணமது...

உணர்வுகள் ஒன்றித்து ஊசிநூலாய் பிணைப்புற்று எழிலும் பொழிலும் கரைந்த ஏதோ ஓர் புதுமை அது..

ஐந்திலும் அறுபதிலும் மாற ஒன்று ஒற்றை வார்த்தையில் வர்ணிக்கமுடியாது ஓரிருவர் கூடி வரைவிலக்கணமில்லை....

காலம் போடும் கோட்டில் கால்கள் ஆடும் நாட்டியமல்ல அன்பு...

சாயல் வெளுத்த பின்னும் சாலை ஒதுங்கும் கூட்டமல்ல அன்பு..

ஒட்டிப் பிறந்த இரட்டையை வெட்டி போவதல்ல அன்பு...

அள்ளிப்பருகும் அமிர்தம் ஆயுள் தந்த ஒரு பொக்கிஷம் அது கிடைப்பவன் பாக்கியசாலி அதை இழப்பவன்......????

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

கருத்துகள்