சூழலைப் படி சூட்சுமம் படி சுற்றுப் புறத்தைப் படி மனிதனைப் புனிதனாய் மாற்றப் படி மதத்தையல்ல மார்க்கத்தைப் படி
பற்பல மாயைகளையும் மறக்காமல் படி மாய உலகின் மந்திரங்கள் படி சூழ்ச்சிகள் செய்வோர் தந்திரம் படி இயந்திர உலகில் எந்திரமாய் இயங்கப் படி
விந்தையான உலகில் விஞ்ஞானத்தைப் படி விசித்திரமான மனிதர்களையும் படி ஏமாற்றங்களை எதிர்கொள்ளப் படி வாழ்விலும் தாழ்விலும் சமநிலை பேணப்படி
தொல்லைகளை தொலைத்துவிடப் படி தோல்விகளை வெற்றிகளாய் மாற்றப் படி மாறுதல்களை நல்லதாய் ஏற்றிடப் படி வாழ்வில் பல படிகள் முன்னேறப் படி படிப்பது எப்படி என அறிந்து படி!
எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா SLPS - 2 பஸ்யால
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக