எல்லோராலும் கைவிடப்பட்ட மறக்க முடியாச் சம்பவம் தொடர்பாக இருவருக்கிடையில் நீண்டதொரு உரையாடல் நிகழ்கிறது
அது எவ்வித வாக்கு வாதங்களுமின்றி பரபரப்புகளுமற்று தொய்வாக செல்கிறது அது பார்வையாளனுக்கு அலுப்பை ஊட்டியது
உரையாடலை உசாராக்கவென துள்ளலான இசை ஒன்றினை அவர்கள் இருவருக்குமிடையில் உடன் அமர்த்துகிறேன்
உரைாயாடல் சூடு பிடிக்கிறது ஆழ்ந்து உறங்கிய ஊர் எழுந்து இசையை நோக்கி படையெடுத்தது
இப்போது பார்வையாளன் கவனத்தை சிதறடிக்காது நடனமாடியபடி உரையாடலை கூர்ந்து அவதானிக்கிறான் அத்தனை மந்திரம் மிக்கது இசை
உங்களுக்கு அவ்வுரையாடலை சோகம் மீந்ததாக மாற்ற வேண்டுமென்றால் நெஞ்சை அதிரச் செய்யும் அவ் இசையினை துரத்திவிட்டு அவ்விடத்தில் மெல்லிசையினை எதற்கும் அமர்த்திப் பாருங்கள்
அவ்வுரையாடல் உங்களது கண்களை நிச்சயம் குளமாக்கும் ஏனெனில் மலைகளின் மனசை சட்டென உருக வைக்கும் சக்தி ஆதியிலிருந்து இசைக்கிருக்கிறது
ஜமீல்
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக