இன நல்லிணக்கம்

[products]

இனமெனும் போர்வையினுள் துவேசமெனும் ஆயுதத்தை திட்டமிட்டு நுழைத் திட்ட எதிரிகளின் சதிவலையில் ஏமாளியாய் நாமின்றி நல்லிணக்க சங்கிலியால் பிணைத்திடுவோம் எம்மை - நாம்

இன, மத வேறுபாடு இயற்கையிலே இருந்தாலும் இரத்தச் செங்குருதி ஒன்றுதானே! நம்முடலில் இதை நாம் உணர்ந்திங்கு இறைவழியில் வாழ்ந்திடுவோம்

பாரம்பரியம் நாமகற்றி புதுமைகள் பல படைத்திங்கு கரைந்து வாழச் சொல்லவில்லை - நாம் கலந்து வாழச் சொல்கிறோம்

தேசமென்ற நேசமுடன் தேசத்தின் விடிவுக்காய் தேய்பிறையாய்த் தாம் தேய்ந்த தலைவரது வரலாறு பல-சொல்லும் தருணமிது

நாட்டின் பல்துறைகள் நன்றாய்த் தலைத்தோங்க நல்லிணக்க நாதமது நாற்றிசையும் ஒலித்தோங்க நாமகற்றிடுவோம் - இன பேதமதை!

பொறாமைக் குணம் நாமகற்றி சந்தேகக்கண் நாம் விலக்கி வஞ்சகம் பாரா உள்ளமுடன் வாழ்ந்திட்டால் - நாமிங்கு வளர்த்திடலாம் தேசமதை!

சர்வதேச உலகினிலே சாதனைகள் நாம் படைத்து சமாதான மலரெங்கும் புது மணம் வீசிடவே இணைத்திடுவோம் - இணக்கமதை!

Jafeer Noorul Shifa 2nd Year SEUSL

கருத்துகள்