வின்னிருந்து விரண்டோடும் மின்னலாய் பெண்ணே உன்னிலிருந்து விரண்டோடியது என் காதல் உன் நினைவுகள் உள் நுழைவதால் முட் சுவடுகள்தான் பாதங்களாய் பதிவாகின்றது
என் விரல் இடுக்கில் பற்றிடும் உன் ஐவிரல் கேட்டேன் என்னை சுவர் இடுக்கில் தள்ளிவிட்டுச் சென்றாய் கண்கள் குளமாகி உள்ளம் கணமாகி காத்திருக்கிறேன் உனக்காகவே
இருண்ட வானில் தொலைந்து போன நிலவாய் நீ இருந்த நிமிடங்களை எனக்குத் தந்து போனாய் மொழிகள் இருந்தும் மௌனம் கொண்டுதான் விழிகள் விம்பி அழுகிறது
உன் நினைவுகள் முள்ளாகி முடக்கி விட்டது என்னை கண்கள் குளமாகியும் காத்திருக்கிருக்கிறேன் காதலியாக கண்ணெதிரில் தோன்றுவாய் என்ற மூட நம்பிக்கையோடு
கவியிதழ் காதலன் ஐ.எம்.அஸ்கி அட்டாளைச்சேனை-08
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக