பாலைவனச் சூட்டில் பாதச் சுவடு பதித்து வாழ்வின் கோலங்களை வரைய வந்தவர்கள்
கண்ணீரில் கடன் தீர்க்க கடல் தாண்டி காலெடுத்து வைத்த சொந்த நாட்டின் சோக வரிகள்
மனைவி மக்கள் இழந்து வீடு பிரிந்து நாடு துறந்து அயல் தேசத்தில் வயிற்றுப் பிழைப்புக்காய் பாடுபட வந்தவர்கள்
வாரிசுகளின் விரல் பிடித்து நடக்கும் வயது தனில் வெப்பத் தணலில் ஆடுகளின் பின்னே வியர்வை தள்ள ஓடிக் களைக்கும் பாசக்காரர்கள்
தாகத்தில் கண்ணீர் அருந்தி வாட்சாப்பில் புன்னகை பரிமாறி மழலைகளின் மொழிகளில் பசி தீர்த்து காலங்களிக்கும் கரையோரப் பறவைகள்
ஏரூர் நிலாத் தோழி
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக