காதல்தானா இது

காற்றலைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான்

வியப்போடு நிற்கிறேன் என் விழி தேடி வந்தவளை விரட்டி விட்ட நிமிடங்கள் தந்த காயங்கலால் கண்கலங்கியதும் மையல் வந்து மனதை தாக்கியதும் மெய்யாய்த் தோன்றியது காதல்தானா இது என்று

கண்ணெதிரில் காற்றாய் கடந்து செல்கிறாள் நீரூற்றாய் நிரம்பி வடிகிறது என் காதல் இரு முகம் காட்டும் கண்ணாடியாய் மனம் உன் மறுமுகம்தான் அவள் என்கிறது

உண்மையாய் இது காதல்தானா அவளருகில் உதட்டினைத் தாண்டி மொழிகள் கூட வெளிவரத் தயங்குகின்றதே இதுதான் காதலோ

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08

[products]

கருத்துகள்