சகியே உனக்காக நானிருக்கிறேன்

சகியே!!! தோற்றுவித்தது யாரோ தோல்கொடுத்தது யாரோ தோற்கடித்தது யாரோ - இன்று தொலைந்துபோனது யாரோ...

சகியே!!!! மனம்விட்டுப் பேச ஆயிரம் பேராம் மனம் மட்டுமின்றி ஒருகண்ணீர் ஆறாம் மனநிம்மதி தொலைந்து ஒருசிலவராம் - இதில் மனநோயாளியாய் பலர் தெருவோரம்தானாம்....

சகியே!!! காயாத வடுவும் கையிலே குடுவும் காயத்துக்கு மருந்தென கால்போன போக்கில் சிலர்...

சகியே!!! இழப்புக்கு ஈடாக இறப்புக்கு தோதாகி இனி ஏதும் வேண்டாமென்று இறந்தவர்கள் எத்தனை பேர்...

சகியே!!! சரித்திரம் பெயர்சொல்லுமென சாக துணிந்து விட்டனர் சகித்துக் கொள்ள முடியாமல் சமாதியாய் ஒரு சிலர்...

சகியே!!! துணிச்சலை நான் கற்றுத் தருகிறேன் துணையாக நின்றுனக்கு துரந்து பிணமாகவல்ல துயரை துடைத்தெறிய...

சகியே!!! கொஞ்சம் சிரித்துக் கொள் - அதில் பஞ்சப்பட்டு என்ன செய்ய வெஞ்சத்தை அடக்கிக் கொள் - அதில் நெஞ்சத்தை பிணைத்திடாதே...

சகியே!!! ஓட்டப்பந்தயத்தின் விதியறிந்த நீ ஓடாமல் நிற்பது ஏன்?? ஓடத்தில் துடுப்பில்லையென்று ஓரமாய் ஒதுங்குவதேன்...

சகியே!!! வாழ்கையின் விதியை மாற்று உன் மதியால் இன்று தோற்றாலேன்ன என்றும் தோற்கப்போவதில்லை...

சகியே!!! உன்னோடு நானிருக்கிறேன் ஊரேன்ன சொன்னாலென்ன உன் ஆட்சிக்காலத்தில் - போதும் உனதான மனசாட்சி மட்டும்....

Asana Akbar Anuradhapura SEU Of Srilanka

[products]

கருத்துகள்