சமூக அவலங்கள்

ரகசிங்கள் அம்பலப்படுத்தப்படுகிறது மனமுறிவுகள் ஏற்படுகையில்..

அமானிதங்கள் தொலைக்கப்படுகிறது எதிரியாய் உருவெடுக்கையில்...

எல்லலாமே மறந்து போகிறது - பல மனசாட்சி இல்லா உள்ளங்களுக்கு....

மோசடிகள் நிகழ்ந்துபோகிறது - பல நம்பிக்கை உரியவர்களிடமிருந்து...

மனிதாபம் இறந்து போகிறது - இந்த காலம் சுழன்றோடுகையில்...

கண்ணீர் பெறுமதியிலக்கிறது பொலியாய் கண் கசக்கையில்...

மடமை தலைத்தூக்குகிறது தலைமைத்துவம் குலைந்து போகையில்...

பழமை மறந்து போகிறது புதுமை கண்ணெதிரே நாட்டியமாடுகையில்..

இல்லாததை நம்பிக்கைகொள்கின்றனர் வாய்மைமிக்கவர்கள் வசனம் பேசுகையில்...

மன்னிப்பு மறத்துப்போய்விட்டது மனிதர்களின் அடிக்கடி பாவனையால்...

சந்தோசம் தொலைந்து போகிறது சந்தேகம் தலைவிரித்து ஆடுகையில்...

Asana Akbar  Anuradhapura SEU Of Srilanka

[products]

கருத்துகள்