பசுந் தென்றலாய் மேனி சிலிர்க்க மேக மழையாய் புன்னகை தூவ தலைச் சுற்றலில் வந்த சேதி
உன் பூ முகம் காணாமல் உன் மழலை மொழி கேட்காமல் தொப்புள் கொடி உறவொன்று உருவானது எனக்குள்
உலகமே என்னை தாயென்று ஏற்க என் பெண்மை பெற்ற மகிழ்ச்சி எனக்குள் நீ.. உன்னை நான் சுமக்கையில் என் தாய்மை நான் உணர்ந்தேன்
உனக்கு வலிக்காமல் நான் நடக்க எட்டி உதைக்கிறாய் தடாவிப் பார்க்கிறேன் தள்ளிப் போகிறாய் தங்கமே உன் பாதம் படுகையில் தான் உணர்கிறேன் என்னை
புளிகளில் அலாதி பிடிப்பை உணரும் புது தரணம் இது மகனோ மகளோ வாந்தியால் சோர்ந்து குந்த வைத்திடும் காலங்களில் தான் உணர்ந்தேன் உன்னை
ஒளிந்திருந்து சில்மிஷங்கள் செய்து எட்டி உதைத்து சாகசங்கள் பன்னி உலகுக்கு நீ வந்த வேளை என் மடியில் உன்னை ஏந்துகையில் முழுமை பெற்றேன் நான் உலகில் நீ எனக்காக வாழ்கையில் முழுமை பெற்றது என் தாய்மை
ஏரூர் நிலாத் தோழி
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக