காலத்தின் கடுகதி ஓட்டத்தின் நடுவே சட்டென திரும்பிப் பார்த்தால், தோளோடு தோள் சாய்த்து தூணாக நின்றான் என்று சொல்ல நண்பன் ஒருவன் இருக்கிறான்
பதின்ம வயதிலே அறிமுகமானான் பட்டென்று ஒட்டி விட்டான்
அது புத்தகப் புழுவாய் புளுங்கிக் கிடந்த காலம் கோட்பாடுகளின் கோட்டைக்குள் நெளிந்து கொண்டு இருந்த காலம்
வந்தான், கதவை தட்டி வெளியே வா என்றான், முடியாது போகவே கதவை தகர்த்து எட்டி உதைத்து வெளியே தள்ளினான்.
வாழ்க்கையை வாழ்ந்து பார், மனிதரை தெரிந்து கொள், யதார்த்தத்தை புரிந்து கொள் என்றான்.
அவனுடன் பழகிய நாட்கள்- நாட்குறிப்பில் அவனில்லா நாட்கள் இல்லை எனலாம்
கையை நீட்டி பாதையை காட்டினான், போகத் தயங்கினேன், கையை பிடித்து கூட்டி செல்லவில்லை, எட்டி உதைத்து முன்னே செல் என்றான்
எது என்பால் இவ்வளவு கரிசனை செய்ய அவனை தூண்டியதோ தெரியாது, ஆனால் அத்தூண்டலில் சிறிதும் தன்னலமில்லை
அவன் அறிய மாட்டான் அவன் செய்த புரட்சியை ஆனால் அவன் அறிய வேண்டும் என் கடைசி மூச்சில் நினைத்து பார்த்து கடையோரம் சிறு புன்னகை வரச்செய்ய, என் இதயக்கடலில் ஆயிரம் கோடி நினைவலைகளை தந்தவனாய்
நண்பன் ஒருவன் இருக்கிறான்.
ஒடியன்
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக