''என்ன நீ ஒலறினியா?'' மீண்டும் சற்றுக் கடினமாகவே அந்தக்குரல் ஒலிக்கவே,
''ஐயோ... பெரிசா ஒன்னுமே சொல்லல நம்பு...'' சொல்லியபடியே சிரித்தவன் மீண்டும்
''ஏய்... அதில்ல... அவனுக்கு எப்டி தெரியும் நாம தா அத பண்ணோம்னு? நீ ஏதும்...''
''ம்... நா போதேல ஏதும் ஒலறியிருப்பேனோ தெரியாது டா...'' அதே குரல்...
வினோத்தினால் கோபத்தை அடக்கமுடியவில்லை. கை முஷ்டியை இருக்கிக் கொண்டான்.
''ஆமா... இப்போ.. பாவம்போல தோணுதுடா.. அந்த பொண்ணு நித்யா...''
''இல்லடா திமிரு புடிச்ச கழுதேக்கி நடந்தது சரிதா...'' சீறிப் பாயும் அதே குரல் ஓங்கி ஒலித்தது.
''சரி... சரி நாம அவனுகிட்ட இப்போ தா ஜாக்றதயா இருக்கணும்.'' எச்சரிக்கும் பாணியில் கேட்ட குரல் மீண்டும் ஒலிக்கவேயில்லை.
புதரிலிருந்து எட்டிப் பார்த்தவனின் கண்களுக்கு அவர்கள் எட்டாத் தொலைவில் இருந்தனர்.' ம்... நல்லா பேசுறீங்கடா... ஒங்களுக்கெல்லாம்... பட்டா தா திருந்துவீங்க... இருங்கடா...' மனதால் வைதுகொண்டே சாலையோரமாக காரை நோக்கி நடந்தான் வினோத்.
*****************************************
''ஹலோ..... கொஞ்சம் வெளிய போகலாமா? ஒபீஸ் முடிஞ்சுதுனா வாங்க....'' வினோத் அலைபேசியை வைத்ததுமே அங்கு விக்னேஷ் வந்தான்.
''அண்ணா... என்ன செல நாளா ஒன்ன காணவேயில்ல?' அவனைப் பார்த்தவன்,
''ஓ நான் பிஸ்னஸ் மீட்டிங்கு போயிருந்த...''
''சரியண்ணா.... நா போய் வாரன்...'' வெளியேறியவனையே வெறித்தபடி நின்றான். ஞாபக அலைகள் அவனைத் தாக்கிக் கொண்டே இருந்தன. 'சீ... என்ன மனிஷனுக ' வெறுப்பை உமிழ்ந்தவன் காரில் ஏறினான்.
***************************************
''நா.. ஒங்கள வர சொன்னதுல காரணம் இருக்கு நெறய விஷயம் இப்ப தா நானே கண்டுபுடிச்சிட்டது.'' பவித்ரா விழிவிரிய அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
''ம்... நா நெனச்சாத விஷயமெல்லாம் நடந்துச்சு...'' பெருமூச்சு விட்டு மீண்டும்,
''கொலயாளிய கண்டுபுடிச்சாச்சு'' கண்களை அகல விரித்தபடியே மீண்டும் அவனையே நோக்கியவளின் கண்களை நோக்கி,
''அது வேறு யாருமல்ல...... அவன்.... அவன்..... விக்னேஷ்.....''
இவ் வார்த்தைகளைக் கேட்டவளின் உதடுகளில் ஏளனப்புன்னகை விரிந்தது.
தொடரும்…. Rifdha Rifhan SEUSL
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக