அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்ததுமே விக்னேஷின் முகம் இருகிப் போயிற்று. பவித்ராவின் கண்களும் ஆச்சரியத்தால் விரிந்தது. அவள் அவனருகே ஓடினாள். அருகே வந்தவளை கோபப் பார்வையொன்றை வீசி விலக்கி விட்டு,
''டேய்... விக்கி.. ஒனக்கு....'' கோபமாக அவனது கன்னத்தை நோக்கி கை நீட்டவும், பவித்ரா நடுவே பாய்ந்தாள். அவளது கண்களும் கோபத்தாலும், துக்கத்தாலும் கலங்கியிருந்தன.
''போதும்... இவன அடிச்சி பிரயோஜனமில்ல... சீ...'' வினோத் அவளை கண்ணிமைக்காது பார்த்து விட்டு,
''சரி... அவன எப்படி...''
தலையில் கையை அடித்துக் கொண்டான். கார் கதவு மூடப்படும் சப்தத்தைக் கேட்டவன் திரும்பிப் பார்த்தான். விக்னேஷ் காரில் ஏறிக்கொண்டிருந்தான்.
''டேய்... வீட்டுக்கு வா...''
கத்தியவனை சட்டை செய்யாது கார் புறப்பட்டது. இப்போது அவனது கவனம் முழுவதும் பவித்ராவின் பக்கம் திரும்பியது.
''ஹேய்... வா....''
கோபமாக கத்திவிட்டு காரில் ஏறினான். அவளும் ஏதும் சொல்லாமலே அவனது பின்னாலேயே போனாள்.
தொடரும்…. Rifdha Rifhan SEUSL
[products]
கருத்துகள்
கருத்துரையிடுக