நித்யா… அத்தியாயம் -28

விக்னேஷ் மீண்டும் அவனது முகத்தைப் பார்த்தான்.

''டேய்.... ஏன்டா பச்சபுள்ள போல பாக்குற..? ''

கார்த்திக் கைகளை அடித்துக் கொண்டான். நிதானமாக புன் சிரிப்பொன்றை உதிர்த்தபடி அவனருகே வந்தவன்.

''டேய்... டேய்... நீ மாட்ட போறன்டு சொல்லு...''

கார்த்திக் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு,

''ரெண்டு பேரும் தான் டா... நா நெனக்கிறன் அந்த பவித்ராவோட வினோத் கூட சேர்ந்துடான் போல...''

''ஓஹ்.... பரவாயில்லை..... இத சும்மா விட எனக்கு முடியாதுடா.... இதுல நீயும் மாட்டாம இருக்கனும் என்டா ஏ கூட வா..."

விக்னேஷ், அவனின் கைகளைப் பிடித்துக்கொண்டே காரினை நோக்கிச் சென்றான் .

****************

பவித்ரா வினோத்தினது முகத்தினை நோக்கி ,

"இந்த காட்டுகுள்ள ஏ கூட்டி வந்தீங்க? ''

அவளை அமைதிப்படுத்த கை விரலை வாய் மீது வைத்து விட்டு

''ஷ்... வா...''

அவளது கையை தனது கைக்குள் இணைத்தபடியே மெதுவாக நடந்தான். சற்று நேரத்தில் ஓர் பாழடைந்த நிலையில் காணப்பட்ட வீடு தென்பட்டது. வியப்பான பார்வையொன்றை அவனது முகத்தில் செலுத்தியவள் இன்னும் குழம்பிப் போனாள். அவனது கண்களில் கண்ணீர். ஏதும் புரியாமல் மீண்டும் ஒரு பார்வை பார்த்தவளை நோக்கி ,

''பவி.... வா..."

அவன் முன்னே சென்றதும் அவள் பின்னே சென்றாள்.

******************

விக்னேஷ் காரை விரைவாக ஓட்டியபடி சென்றான்.

"டேய் எங்க அவசரமா போறோம்?'' கார்த்திக் கேட்டதுமே,

''நீ அமைதியா வா.... அவங்க எங்க போயிருக்காங்க என்றத பாப்போம்....''

தூரத்தில் ஓர் ஓரமாய் கார் நிற்பதைக் கண்ட கார்த்திக்,

''டேய்... உங்கண்ணாட கார் போல....''

''ம்..ம். . ''

''சீக்ரம் பாத்துட்டு வாறன் நீ கார்ல நில்லு....''

விக்னேஷ் அவசர அவசரமாக அந்த காரை நெருங்கினான். அதிர்ச்சியடைந்தவன்

''சரி... நா ஊகிச்சது... இந்த வீட்ட தேடி வந்துட்டானுக...''

''சீ....''

மனது படபடக்க அவனது காரை நோக்கி ஓடினான்.

''டேய்... அது உங்கண்ணாவோடது தானே?'' அவனுக்கு கை காட்டியவன்

''பிளீஸ் வாய மூடு...."

''போய் பேசிகலாம்...''

மௌனமாக நின்ற கார்த்திக்கிடம் கூறியவன் மீண்டும் காரை ஓட்ட ஆரம்பித்தான்.

தொடரும்…. Rifdha Rifhan SEUSL

கருத்துகள்