நித்யா… அத்தியாயம் -29

வினோத் சற்று நேரம் மௌனமாக அந்த இடத்தில் நின்றான். அவளும் மௌனம் காத்தாள்.

''பவி... இது தான் உங்கக்காவோட பேவரிட் பிளேஸ்...''

கண்களை சுருக்கிக் கொண்டவளைப் பார்த்து ,

"உண்ம தான் டா.... இங்க வெச்சி தா... அந்த கோர சம்பவமும்....''

மேலும் பேசமுடியாதவன் போல முகத்தை மூடிக் கொண்டு விம்மினான். பவித்ரா ஆச்சரியத்தின் விளிம்புக்கே சென்றாள். அவளது சிந்தனை தடுமாறியது. அவனருகே சென்று,

''நீங்க என்ன சொல்றீங்க? புரியல்ல...?''

''அது... அது... உங்கக்காவ சும்மாவல்ல கொண்ணு போட்டானுக...''

''அப்போ... என்னாச்சு...'' கத்தினாள் அவள்.

''பிளீஸ் கத்தாத... வா போலாம்...'' அவள் கைகளால் தடுத்து,

''நீ சொன்னா தான் இங்கிருந்து வருவன்....''

"அடம்புடிக்காத... வா....'' அவர்கள் மீண்டும் காரினுள் ஏறி சென்றனர். கார் புதிய பாதையொன்றில் போகவே,

''மறுபடி எங்க போற ?''

''பிளீஸ் கத்தாம வாறியா?''

அவனது கம்பீரமான குரலைக் கேட்டவள் அமைதியானாள். கார் பழைய பங்களாவொன்றினருகே நின்றது.

''வா...''

'இப்ப எங்க கூட்டி வந்தாரோ' கண்களில் கோபத்துடன் இறங்கியவள், அந்த பங்களாவின் முன்னே நின்றவளைக் கண்டு ஆச்சரியமடைந்தாள்.

'' வினோத், பவித்ரா... வாங்க...''

அந்தப் பெண் அவர்களை அழைத்தவிதம் அவளுக்குள் ஏதோ ஒருவித நிம்மதியைத் தந்தது போலுணர்ந்தாள்.

தொடரும்…. Rifdha Rifhan SEUSL

கருத்துகள்