மாலைவேளையில் மதியம் சாப்பிட்ட பிறகு மதிமயங்கி துயில் விழித்து மங்களமாக மாப்பிள்ளை போல் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய பொழுதுகள்
சூரியன் மறையும் வரை பந்துவீசி, துடுப்பெடுத்தாடி துணிவாக ஓடியாடித் திரிந்து துன்பமின்றி சந்தோசமாக பொழுதுகளை பரிமாறிக் கழித்த மாலை வேளை
சிறு சிறு சண்டைகள் சிறு சிறு கைகலப்புகள் எல்லாம் முடிந்து தோளின் மேல் கை போட்டு ஒன்றாய் சேர்ந்து போன பொழுதுகள்
இப்போது தேடினாலும் கிடைப்பதில்லை அந்த அற்புதமான மாலைப்பொழுது மைதானம் இருந்தும் மட்டை இருந்தும் மஞ்சள் பந்து இருந்தும் என்னென்னவோ இருந்தும் அந்த அழகிய விளையாட்டுப் பொழுதுகளை காணவில்லை. நினைவுகள் தொடரும்
பஸ்ல் அஹமட்
கருத்துகள்
கருத்துரையிடுக