நித்திரை இழந்து நித்தமும் உணர்கிறேன் நீந்தி வரும் மீனினை கரைதொடும் முன்னே கடல் கொண்டு செல்வதாய் என்னில் நீ நிரப்பிய உன் நினைவுகள் கதறலால் கொண்டு செல்கிறது என் இரவுகளை என்று
நிழலாய் தொடரும் என்னாசை நிராசையாய்ப் போனதால் பேராசை கொண்டதாய் உணர்கிறேன் பேரழகியே உன்னை இழக்க நேர்கையில்
சுவாசத்தின் சூடு தீண்டி நேசத்தை உணர்த்திவிட ஒரு நொடி போதாதா எனக்கு என் மௌனத்தை காவு கொள்ளும் உன் பார்வைகளை வில்வித்தை வேடனாய் வேசம் தரித்துதான் கொண்டு செல்ல வேண்டுமா
என் நினைவின் கதறல் உன் இதயக் கதவருகில் தொடர்கிறதே கல் மனம்போல் இன்னும் காட்சியளிப்பது எதற்கு
நீ இன்றிய தனிமைதான் வானின்றிய நிலவாய் மறைந்து வாழச் சொல்கிறது என்னை என்ன செய்வேன் நான் எனக்கென்று என்னோடு இருப்பது உனைக் கண்டு நான் சேர்த்து வைத்த நினைவுகள் மாத்திரம்தான்
நீண்டு கொண்டே போகும் இந்த இரவில் நீந்திக் கொண்டிருக்கும் நினைவுகளுக்கு உறக்கம் எழவில்லையோ அவை அழுது கொண்டே அரைநொடியில் ஆழிக்கடலாய் என் மனதை மாற்றிவிட்டது
என் நினைவின் கதறல் நீ இருக்கும் தூரம் வரை செல்லாததால்தான் நான் இருக்கும் அறை முழுதும் வெள்ளமாய் தேங்கி நிற்கிறது விழியழுத கண்ணீர்த் துளிகள் ஒன்று கூடி
கருத்துகள்
கருத்துரையிடுக